ராணுவ ஆள்சேர்ப்பு மோசடி: 5 லெப்டினன்ட் கர்னல் உட்பட 17 உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

ராணுவ ஆள்சேர்ப்பு மோசடி: 5 லெப்டினன்ட் கர்னல் உட்பட 17 உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு
ராணுவ ஆள்சேர்ப்பு மோசடி: 5 லெப்டினன்ட் கர்னல் உட்பட 17 உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

ஆயுதப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ள ஐந்து அதிகாரிகள் உட்பட 17 ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆறு தனியார் நபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆயுதப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், சிபிஐ திங்களன்று நாடு முழுவதும் 30 இடங்களில் தேடல்களை நடத்தியது.

சிபிஐ வழக்கு பதிவு செய்த மூத்த அதிகாரிகள் பட்டியலில் இராணுவ விமான பாதுகாப்பு படையின் லெப்டினன்ட் கர்னல் எம்.வி.எஸ்.என். பகவான்; கபுர்தலாவின் சேவை தேர்வு மையத்தின் லெப்டினன்ட் கர்னல் சுரேந்தர் சிங், பரேலியின் 6 மலைப்பிரிவு ஆர்ட்னன்ஸ் பிரிவின் லெப்டினன்ட் கர்னல் எஸ் எஸ் சவுகான், புதுதில்லி டிஜி ஆட்சேர்ப்பு இணை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் சுக்தேவ் அரோரா, பெங்களூரு தெற்கு தேர்வு மைய ஜிடிஓ லெப்டினன்ட் கர்னல் வினய் மற்றும் கபுர்தலா வடக்கு தேர்வு மைய ஜிடிஓ மேஜர் பவேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லெப்டினன்ட் கர்னல் எம்.வி.எஸ்.என். பகவான் ஆட்சேர்ப்பு மோசடியின் முக்கியமான நபர் என்று கூறப்படுகிறது. மேலும் பல கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளின் உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அடிப்படை மருத்துவமனை, கன்டோன்மென்ட், பிற இராணுவ நிறுவனங்கள், 13 நகரங்களை உள்ளடக்கிய 30 இடங்களில் இன்று தேடல்கள் நடத்தப்பட்டன. தேடல்களின் போது மீட்கப்பட்ட ஆவணங்கள் ஆராயப்படுகின்றன என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சிபிஐ எஃப்..ஆர் பிரிகேடியர் (விஜிலென்ஸ்) வி.கே.புரோஹித்தின் புகாரை அடிப்படையாகக் கொண்டது. பிப்ரவரி 28, 2021 அன்று, தற்காலிகமாக நிராகரிக்கப்பட்ட ஆயுதப்படைப்பணி விண்ணப்பதாரர்களின் மறுஆய்வு மருத்துவ பரிசோதனையை அனுமதிக்க லஞ்சம் வாங்குவதில் பணியாளர்களை ஈடுபடுத்தியதாக இந்த புகாரில் கூறப்படுகிறது.

"இந்திய இராணுவத்திற்கு பொருத்தமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு பணியில் நடந்த  ஊழல் நடைமுறைகள் சகிக்கமுடியாதது. விசாரணையின் நோக்கம் சிவில் நிறுவனங்கள் உட்பட பல ஏஜென்சிகளை உள்ளடக்கியிருப்பதால், இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளதுஎன்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com