3,300 போன் அழைப்பு, 1500 மெசேஜ், போலி பேஸ்புக் கணக்கு...டெல்லி கொலையில் மேலும் திடுக்!
ராணுவ வீரர் மனைவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ மேஜர் பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித் துள்ளனர்.
டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சனிக்கிழமை பிணமாகக் கிடந்தார். இது பற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் ணின் கழுத்து அறுக்கப்பட்டும் முகம் சிதைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என்று டெல்லியின் மேற்கு பதியில் வசிக்கும் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி போலீசில் புகார் அளித்தர். அப்போது சாலையில் கொல்லப் பட்டுக் கிடந்த பெண்ணை அவரிடம் காட்டி விசாரித்தனர். அது தனது மனைவி சைலஜாதான் என்றார் அமித்.
போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அமித்தின் நண்பரும் மற்றொரு ராணுவ அதிகாரியுமான நிகில் ராய் ஹண்டா மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை தேடியபோது அவர் தலைமறைவானார். பின்னர் அவரை மீரட் நகரில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பாகியுள்ளது.
ராணுவ மேஜர் அமித் 2015-ம் ஆண்டு நாகலாந்தில் பணியாற்றிய போது, ஹண்டாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது சைலஜா மீது ஆசை கொண்டார், ஹண்டா. இதற்கிடையில் அமித் டிரான்ஸ்பரில் டெல்லிக்கு வந்தார். பிறகும் சைலஜாவுடன் நட்பைத் தொடர்ந்துள்ளார். ஹண் டா, இந்த மாதம் 4-ம் தேதி டெல்லி வந்துள்ளார். வயிற்றுப் பிரச்னை காரணமாக அவதிப்படும் அவர் மகனை டெல்லி பேஸ் மருத்துவ மனை யில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அதே மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார் சைலஜா. ஹண்டாவுக்கு சைலஜா வைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதற்காக தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று மருத்துவமனை வந்த சைலஜாவை காரில் ஏற்றியிருக்கிறார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சுற்றியுள் ளனர். அப்போது திருமணம் பற்றி வற்புறுத்தியிருக்கிறார் ஹண்டா. மறுத்தார் சைலஜா. டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. திடீரென்று கத்தியால் சைலஜாவின் கழுத்தை அறுத்தார். இதை எதிர்பார்க்காத அவர், காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால், காரை வேகமாக இயக்கி அவர் மீது மூன்று முறை ஏற்றிக் கொன்று விட்டு தப்பினார் ஹண்டா. விபத்து என்று நம்ப வைப்பதற்காக இப்படிச் செய்துள்ளார்.
இதையடுத்து போலீசார், சுமார் 200 சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அவரது காரை கண்டுபிடித்தனர். மீரட்டில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் இருந்த அவர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
சைலஜாவின் சகோதரர் கூறும்போது, ’சைலஜா எல்லோரிடமும் சகஜமாக பழகுபவர். அதைத் தவறாகப் புரிந்துகொண்டார். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இப்படி செய்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹண்டாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை சைலஜாவுடன் 3,300 முறை போனில் பேசியுள்ளார் ஹண்டா. ஆயிரத்து ஐநூறு மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். பெரும்பாலான மெசேஜ்களுக்கு சைலஜா பதில் சொல்லவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹண்டா, இரண்டு பேஸ்புக் பக்கங்களை தொடங்கியுள்ளார். ஒன்றில் ராணுவ மேஜர் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போலி கணக்கில் தொழிலதிபர் என்று தெரிவித்து பலரிடமும் பழகியுள்ளார். சைலஜா தவிர டெல்லியை சேர்ந்த மேலும் மூன்று பெண்களிடம் அவர் நெருங்கி பழகியுள்ளார். அந்தப் பெண்களிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
போலீசார் ஹண்டாவிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.