டெல்லி கொலையில் போலீசை ஏமாற்றும் ராணுவ மேஜர்!

டெல்லி கொலையில் போலீசை ஏமாற்றும் ராணுவ மேஜர்!

டெல்லி கொலையில் போலீசை ஏமாற்றும் ராணுவ மேஜர்!
Published on

ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ மேஜர் புதிய புதிய தகவல்களைச் சொல் வதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.

டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சனிக்கிழமை பிணமாகக் கிடந்தார். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டும் முகம் சிதைக்கப்பட்டும் இருந்தது. இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என்று டெல்லியின் மேற்கு பதியில் வசிக்கும் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி போலீசில் புகார் அளித்தர். அப்போது சாலையில் கொல்லப்பட்டுக் கிடந்த பெண்ணை அவரிடம் காட்டி விசாரித்தனர். அது தனது மனைவி சைலஜாதான் என்றார் அமித்.

 போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அமித்தின் நண்பரும் மற்றொரு ராணுவ அதிகாரியுமான நிகில் ராய் ஹண்டா மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை தேடியபோது அவர் தலைமறைவானார். பின்னர் அவரை மீரட் நகரில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பாகியுள்ளது.


ராணுவ அதிகாரி அமித் 2015-ம் ஆண்டு நாகலாந்தில் பணியாற்றிய போது, ஹண்டாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் மனைவி சைலஜா மீது ஆசை கொண்டார், ஹண்டா. இதற்கிடையில் அமித் டிரான்ஸ்பரில் டெல்லிக்கு வந்தார். பிறகும் சைலஜாவுடன் நட்பைத் தொடர்ந்துள்ளார். ஹண்டா, இந்த மாதம் 4-ம் தேதி டெல்லி வந்துள்ளார். வயிற்றுப் பிரச்னை காரணமாக அவதிப்படும் அவர் மகனை டெல்லி பேஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அதே மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார் சைலஜா. ஹண்டாவுக்கு சைலஜாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதற்காக தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

சம்பவத்தன்று மருத்துவமனை வந்த சைலஜாவை காரில் ஏற்றியிருக்கிறார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சுற்றியுள்ளனர். அப்போது திருமணம் பற்றி வற்புறுத்தியிருக்கிறார் ஹண்டா. மறுத்தார் சைலஜா. டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. திடீரென்று கத்தியால் சைலஜாவின் கழுத்தை அறுத்தார். இதை எதிர்பார்க்காத அவர், காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால், காரை வேகமாக இயக்கி அவர் மீது மூன்று முறை ஏற்றிக் கொன்று விட்டு தப்பினார் ஹண்டா. விபத்து என்று நம்ப வைப்பதற்காக இப்படிச் செய்துள்ளார்.

இந்நிலையில் ஷைலஜாவைக் கொல்ல ஹண்டா பயன்படுத்திய கத்தி பற்றி தவறான தகவலைத் தெரிவித்து வருகிறார். அதோடு போலீஸை குழப்ப பொய்யான தகவல்களையும் கூறிவருகிறார். முதலில் ஒரு தகவலையும் பிறகு அதையே மாற்றி வேறு மாதிரியும் கூறி வருகிறார். புதன்கிழமை சம்பவம் நடத்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று கொலைக்குப் பயன்படுத்திய கத்தி பற்றி விசாரித்தனர். இங்குதான் வீசினேன் என்று கூறியிருந்தார் ஹண்டா. ஐந்து மணி நேரம் தேடியும் கத்தியை காணவில்லை. அதனால் அவர் காரில் கைப்பற் றப்பட்ட சிறு கத்தியை மட்டுமே கொண்டு ஷைலஜாவைக் கொன்றிருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர். ஆனால் , ‘கொல்லப்பட்ட ஷைலஜாவின் கழுத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் பெரிய கத்தியை வைத்துதான் அறுத்திருக்க முடியும்’ என்று தடயவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் போலீசார் தவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com