இந்தியா
ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - தொடரும் தேடுதல் வேட்டை
ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் - தொடரும் தேடுதல் வேட்டை
ஜம்மு காஷ்மீரின் ராணுவ தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள 41-வது ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் படையினரின் ராணுவ தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பூஞ்ச் மாவட்டம் மெந்தார் பகுதியில் இன்று காலை 5.30 மணியளவில் தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.