இந்தியா
இந்திய ராணுவத் தாக்குதலில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் பலி
இந்திய ராணுவத் தாக்குதலில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் பலி
மியான்மர் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
மியான்மர் எல்லையில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் ஏராளமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்திய தரப்பில் சேதம் எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது. என்எஸ்சிஎன் - கே என்ற கிளர்ச்சி அமைப்பினர் நாகாலாந்தை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதற்காக போராடி வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் இந்திய எல்லையை ஒட்டிய மியான்மர் நாட்டு பகுதியில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீதுதான் தற்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.