“விளைவுகள் கடுமையாக இருக்கும்” - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

“விளைவுகள் கடுமையாக இருக்கும்” - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

“விளைவுகள் கடுமையாக இருக்கும்” - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
Published on

பாகிஸ்தான் ஏதாவது தாக்குதல் நடத்த முற்பட்டால் அதற்கு இந்தியாவின் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்று இந்திய ராணுவப் படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1999ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போர் முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைப் போற்றும் வகையில் இந்திய ராணுவத்தின் சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ‘கார்கில் போருக்கு பிறகான 20 ஆண்டுகள்’ என்ற கருத்தரங்கில் ராணுவப்படை தளபதி பிபின் ராவத் உரையாற்றினார்.  

அதில், “பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும். வருங்காலத்தில் வரும் தாக்குதல்கள் மற்றும் சண்டைகள் மிகவும் வன்முறையாக இருக்கும். பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகள் யாரும் எதிர்பாரத வகையில் இருக்கும். 

ஏற்கெனவே உரி மற்றும் பாலாகோட் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்தின் பதிலடியை வெளிப்படுத்தின. இவற்றால் இந்திய ராணுவத்தின் பலம் தெளிவாக தெரிந்திருக்கும். அத்துடன் தற்போது இந்திய ராணுவம் சில மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்திய ராணுவத்தில் விண்வெளி, சைபர் மற்றும் சிறப்பு படை பிரிவு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com