இந்திய விமானப்படை முன்னாள் தளபதி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
Published on

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காமல் அவர் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு உள்ளார். அதில் அவர், விமானப்படையின் கட்டமைப்புக்கு மிகவும் பாடுப்பட்டவர் மார்ஷல் அர்ஜன் சிங் அவரது அர்ப்பணிப்பை நாடு என்றும் மறவாது என்று குறிப்பிட்டுள்ளார். 

அர்ஜன் சிங் 1938-ல் விமானப்படையில் சேர்ந்தார். 1965 இந்தியா பாகிஸ்தான் போரின் போது ஹீரோவாகத் திகழ்ந்தார். அப்போது அவருக்கு 44 வயது. 1971ல் விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற அர்ஜன் சிங், அதன்பிறகு சுவிட்சர்லாந்து தூதராக பணியாற்றினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com