இந்தியா
செல்ஃபோன் கோபுரங்களால் ஆபத்தா? நிறுவனங்கள் விளக்கம்
செல்ஃபோன் கோபுரங்களால் ஆபத்தா? நிறுவனங்கள் விளக்கம்
செல் ஃபோன் கோபுரங்களால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இந்திய செல்ஃபோன் சேவை நிறுவனங்களின் சங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள செல் ஃபோன் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவு வரையறுக்கப்பட்ட அளவிற்கு உள்ளேதான் இருக்கிறது என்றும் இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. புற்றுநோய் ஏற்படுத்தியதாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் செல்ஃபோன் கோபுரத்தை மூடக் கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவ்விளக்கம் வெளியாகியுள்ளது.