சிக்கிம் தூதர் ஆனார் ஏ.ஆர்.ரகுமான்!

சிக்கிம் தூதர் ஆனார் ஏ.ஆர்.ரகுமான்!

சிக்கிம் தூதர் ஆனார் ஏ.ஆர்.ரகுமான்!
Published on

சிக்கிம் மாநில தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் குளிர்கால திருவிழா நேற்று தொடங்கியது. முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடைப்பெற்ற இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதலமைச்சர், சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதனை ரகுமான் ஏற்றுகொண்டார். தனது வேண்டுகோளை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான தனது மதிப்புமிக்க நேரத்தை செலவழிப்பதற்காக ரகுமானுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என பவன்குமார் கூறீனார்.

விழாவில் பேசிய ரகுமான், சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமித்தது எனக்கு கிடைத்த பாக்கியம், அதற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, இரக்கம், அமைதி, ஒருமைப்பாடு  மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காடாக திகழ்கிறது என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com