காங்கிரசில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி

காங்கிரசில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி
காங்கிரசில் இணைந்தார் திருநங்கை அப்சரா ரெட்டி

மகிளா காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநங்கை அப்சரா ரெட்டியை பெரும்பான்மையானவருக்கு நன்றாக தெரியும். எம்.ஏ முடித்துள்ள அவர் ஊடக அனுபவம் மிக்கவர். பல்வேறு சினிமா பிரபலங்களையும் பேட்டி கண்டுள்ள அப்சரா ரெட்டி, அவ்வப்போது தன் சமூக மக்களுக்காகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமூக செயற்பாட்டாளராகவும் தனது பணியினை தொடர்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அப்சரா ரெட்டி கட்சிக்கான பணிகளில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்தது. தற்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் வசம் அதிமுக உள்ளது. இந்நிலையில் அப்சரா ரெட்டி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு மகிளா காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளராக பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்தான் காங்கிரஸ் கட்சியின் முதல் திருநங்கை தேசிய பொதுச் செயலாளர் ஆவார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவருக்கு இப்பதவியை வழங்கியுள்ளார். அப்சரா ரெட்டி ராகுல்காந்தியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com