Headlines
Headlinespt

Headlines|முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மோடி முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மோடி முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் என்று, இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும் சூழலில் பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • பாகிஸ்தான் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் ஐநா பொதுச் செயலாளர் தொலைபேசியில் பேச்சு. மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தேவை குறித்து எடுத்துரைத்ததாக தகவல்.

  • பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல்காந்தி கடிதம் வாயிலாக வலியுறுத்தல்.

  • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம். கொலிஜியம் பரிந்துரையைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு..

  • 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி. தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் கொளத்தூரில் பேட்டி.

  • 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பெரிய 'ஓ' போடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி கருத்து. 2026இல் திமுக ஆட்சியின் 2.0 லோடிங் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை விமர்சித்து இபிஎஸ் பதிவு.

  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் தனித்தனியாக சந்திப்பு. அதிமுக இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்.

  • தருமபுரியில் இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம். கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் அறிவிக்கப்பட வாய்ப்பு.

  • பத்ம பூஷண் விருது பெற்றதற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன் என்றும், விரைவில் நேரில் சந்தித்து பேசுவதாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்குமார் பேட்டி.

  • மே 2ஆம் தேதி முதல் சென்னையில் குளிர்சாதன புறநகர் ரயில்களின் சேவை அதிகரிப்பு. பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.

  • நெல்லையப்பர் கோயிலில் ஆபாசமாக நடனமாடி ரீல்ஸ் எடுத்த சிறார்கள். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மன்னிப்பு கோரி வீடியோ வெளியீடு.

  • கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம். கூழ் படையலிட்டு பக்தர்கள் வழிபாடு.

  • கோடை வெயிலுக்கு மத்தியில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி.

  • திருச்சியில் கடந்த 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலை இடமாற்றம். பூங்காவுக்குள் சிலையை நிறுவும் பணிகள் தொடக்கம்.

  • சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் விடுவிப்பு..ஜாமினில் வெளிவந்தபோது தாயைக் கொன்ற வழக்கில் மட்டும் விடுவித்து உத்தரவு.

  • நாட்டின் பாதுகாப்புக்காக உளவு கருவிகளை பயன்படுத்துவதில் என்ன தவறு? என பெகாசஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி.

  • ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது கொல்கத்தா. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ்.

  • கனடா பொதுத் தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர். 65 பேர் போட்டியிட்ட நிலையில், 24 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு.

  • மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம். பள்ளியின் தாளாளர் உட்பட இருவர் கைது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com