Headlines|இளம் வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த சூர்யவன்ஷி முதல் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் வரை!
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 வயது இளம் வீரர் சூர்யவன்ஷி அதிரடி சதம் .மிக இளம் வயதில் ஐபிஎல்லில் சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்று பெருமையை பெற்று அசத்தல்.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. சூர்யவன்ஷியின் மின்னல் வேக சதத்தால் வீழ்ந்தது குஜராத் டைட்டன்ஸ்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு. அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ். ஏற்கனவே வகித்து வந்த பால் வளத்துறையே ஒதுக்கீடு.
பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தோருக்கு பத்ம விருதுகள் வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கவுரவிப்பு. பத்ம பூஷண் விருதை பெற்றார் நடிகர் அஜித் குமார்; கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித் கடும் கண்டனம். மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என வலியுறுத்தல்.
போஜ்புரி பாடகி நேஹா ரத்தோர் மீது தேசத் துரோக வழக்கு. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக புகார்.
மே 3ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. கட்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என துரைமுருகன் அறிக்கை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், பேசுவதை தடுக்க போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டரா? என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
ஆந்திராவில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் வெங்கட சத்யநாராயணா போட்டி. அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியான நிலையில் அறிவிப்பு.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மணப்பாறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு. பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆணை.
தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம். சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் அதிரடி உத்தரவு.
பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி. 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்.
விழுப்புரம் அருகே லாரி மோதியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல். போக்குவரத்து பாதிப்பு.
பொது வெளியில் காவல் துறை அதிகாரியை அடிக்க கையை ஓங்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா. ரவுடியை போல் முதல்வர் நடந்து கொள்வதை மன்னிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் மின்தடையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.ரயில், இணையதளம், ஏடிஎம் சேவைகள் முடங்கியதால் மக்கள் தவிப்பு.
உக்ரைன் மீதான போர் மே 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தற்காலிக நிறுத்தம். இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 80ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி ரஷ்யா அறிவிப்பு.