Headlines
Headlinespt

Headlines|நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல் முதல் நடிகை நஸ்ரியா வெளியிட்ட அறிக்கை வரை!

நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல் முதல் நடிகை நஸ்ரியா வெளியிட்ட அறிக்கை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல். அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு. இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக பழகிய சிலர், செல்போன் பறிக்கும் நோக்கத்தில் சின்னத்துரையை வரவழைத்து தாக்குதல். நெல்லை காவல் அதிகாரி விளக்கம்.

  • கல்வி நிலையங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளையும், கட்டுக்கதைகளையும் மாணவர்களிடம் பரப்பிவிடக்கூடாது. அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே போதிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

  • பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி பாஜக மேலிடம் முடிவு செய்யும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்.

  • அதிமுக கட்சிக் கொடி, பெயரை பயன்படுத்தத் தடை கோரி டிடிவி தினகரனுக்கு எதிரான தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றார் எடப்பாடி பழனிசாமி . அமமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த நிலையில் முடிவு .

  • விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் இஸ்லாமியர்கள் அழைக்க வேண்டாம் என உபியை சேர்ந்த அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் வேண்டுகோள். தவெகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதற்கான சதி என தமிழ்நாடு முஸ்லீம் லீக் குற்றச்சாட்டு.

  • திண்டுக்கல் கன்னிவாடி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு கழுத்தில் சூடு வைத்த சம்பவம். அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடை நீக்கம்.

  • நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி செயின் பறிக்க முயன்ற சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்.

  • தன்னை பற்றி பெற்றோரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்த பாட்டியை பேரனே கொலை செய்ய முயற்சித்தது அம்பலம்.

  • ஓசூர் அருகே 400 ஆண்டுகள் பழமையான தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழா கோலாகலம். துடைப்பம் மற்றும் முறத்தால் அடி வாங்கி பக்தர்கள் விநோத வழிபாடு.

  • மத போதகர் ஜான் ஜெபராஜ் மீதான போக்சோ வழக்கில் மேலும் ஒருவர் கைது. ஜெபராஜின் உறவினர் என்று கூறப்படும் பென்னட் ஹாரிஸை கைது செய்து சிறையில் அடைத்த மகளிர் காவல்துறை.

  • கர்நாடகாவில் ஆயிரத்து 351 சாதிகள் மற்றும் உட்பிரிவுகள். சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளில் தகவல்.

  • மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப்பகிர்வை அதிகரிக்க வேண்டும் என 16ஆவது நிதி ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்.

  • இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ். வரும் 21ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

  • நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக வீசப்பட்ட சூப்பர் ஓவர். ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, திரில் வெற்றி பெற்ற டெல்லி அணி.

  • சூர்யாவின் "ரெட்ரோ" படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் விற்பனை செய்யப்படவில்லை என 2டி நிறுவனம் விளக்கம். ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

  • மன நலன் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் போராடி வருவதாக நடிகை நஸ்ரியா அறிக்கை. நண்பர்களுடன் தொடர்பில் இல்லாதததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் உருக்கம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com