Headlines
Headlinespt

Headlines|இசையமைப்பாளர் ரஹ்மானின் ஆதங்கம் முதல் கொல்கத்தா அணியை வீழ்த்திய பஞ்சாப் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பென்சில் பிரச்னையில் 8 ஆம் வகுப்பு மாணவன் முதல் கொல்கத்தா அணியை வீழ்த்திய பஞ்சாப் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தம். அரசு விதித்துள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்.

  • உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம். சட்ட முன்வடிவை இன்று தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  • மே 2ஆம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

  • பாட்டாளி மக்கள் கட்சியில் சலசலப்பு இல்லை என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி. ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் ஒன்றாக பங்கேற்பார்கள் என்றும் உறுதி.

  • சென்னை மெரினா கடற்கரையில் கட்டணம் வசூலிக்கப்படாது என மாநகராட்சி ஆணையர் விளக்கம். பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடுசெய்யும் என்றும் தகவல்.

  • நெல்லை தனியார் பள்ளியில் பென்சில் பிரச்னையில் சக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன் காவல்நிலையத்தில் சரண். இளஞ்சிறார் நீதி குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அனுமதி.

  • நெல்லை பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்பு. முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

  • வாணியம்பாடி அருகே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறி விபத்து. இளைஞரின் கை துண்டாகி படுகாயம் அடைந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதி.

  • வேலூர் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலம், வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம். அமைதிக் குழு விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

  • பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் இனி அசாமி கட்டாய அலுவல் மொழி. அரசு அறிவிப்புகள், உத்தரவுகள் உள்ளிட்டவை அசாமி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் என முதல்வர் அறிவிப்பு.

  • நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல். இந்நிலையில், அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு.

  • டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம். லாரி உரிமையாளர்களுடன் முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

  • வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தெலங்கானா அரசு அரசாணை. உயிரிழப்பவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு.

  • அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை டெலிவரி எடுப்பதை நிறுத்துங்கள். தங்கள் நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு.

  • ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா அணியை போராடி வீழ்த்திய பஞ்சாப். விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

  • ஆஸ்கர் வென்ற பிறகு தனக்கு வந்த வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com