Headlines|ரேபிஸ் நோயால் உயிரிழந்த சிறுவன் முதல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வரை!
தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் அதிகரிப்பு. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை. காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுட்டுக்கொன்றதாக காவல்துறை தகவல்.
சென்னை பெரவள்ளூரில் மதுபோதையில் ஒருவர் வெட்டிக் கொலை. ஆட்டோவில் வந்த இருவருக்கு காவல் துறை வலைவீச்சு.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் ஜிப்லி புகைப்படங்கள்.. நான் முதல்வன் திட்டத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியீடு.
மௌனம் அனைத்தும் நன்மைக்கே... டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகம், புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என கணிப்பு.
சேலத்தில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளான 9 வயது சிறுவன் உயிரிழப்பு. தெருநாய்க் கடிக்கு உரிய சிகிச்சை பெறாததே காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம்.
பங்குனி ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு. தொடர்ந்து 18 நாட்கள் கோயில் திறந்திருக்கும் என அறிவிப்பு.
மேற்கு வங்கத்தில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த பரிதாபம்.
கர்நாடகாவில் கடந்த அக்டோபர் மாதம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் மீட்பு.
மதுரை அருகே பாழுங்கிணற்றில் பதுக்கப்பட்டிருந்த நிலையில் 6 பேரை கைது செய்தது காவல்துறை. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400ஆக உயர்வு. சிதைந்து கிடக்கும் கட்டடங்களில் தொடரும் மீட்புப் பணி.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பதில் வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் அறிவிப்பு. எல்லா நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் சர்வதேச வர்த்தகப்போர் அபாயம்.