
கர்நாடகவில் முதல் பெண் காவல் துறை தலைமை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது பதவியில் இருக்கும் காவல் துறை தலைமை அதிகாரி (டிஜி - ஐஜிபி) ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அந்த பதவிக்கு நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தில் பிறந்த நீலாமணி 1983 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் கர்நாடகாவின் முதல் பெண் டிஜி-ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தாராமையா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீலாமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல் பெண் காவல் துறை தலைமை அதிகாரியாக தேர்வாகியுள்ள நீலாமணி என்.ராஜூக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.