மொபைல் போன் ஏற்றுமதி சந்தையில் சாம்சங் - ஆப்பிள் இடையே கடும் போட்டி

மொபைல் போன் ஏற்றுமதி சந்தையில் சாம்சங் - ஆப்பிள் இடையே கடும் போட்டி
மொபைல் போன் ஏற்றுமதி சந்தையில் சாம்சங் - ஆப்பிள் இடையே கடும் போட்டி

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாக நடந்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் (PLI) கீழ் இந்தியாவில் தற்போது சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரான் ஆகியவையும், சாம்சங் நிறுவனமும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் (PLI) பலனடைந்து வருகின்றன. இதன் கானமாக இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது. ள்ளது.

இந்தியாவில் இந்த வருடம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் போன் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்குக்கும் அதிகமாக நடந்துள்ளது. நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் மொபைல் போன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும்.

2021இல் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அளவு 2.2 பில்லியன் டாலராக இருந்தது. இதில் சாம்சங் நிறுவனத்தின் பங்களிப்பாக 90 சதவீதமும், ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பாக 10 சதவீதமும் இருந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியால், இந்த ஆண்டில் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியின் மதிப்பு 12.14 பில்லியன் டாலராக உச்சத்தை தொட்டது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 55 சதவீதம் அதிகமாகும். 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் மொபைல் போன்களின் பங்களிப்பு 30 சதவீதமாக இருந்தது. 2022இல் இது 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அந்நிறுவனம்  இந்தியாவில் தற்போதுதான் மொபைல் உற்பத்தியில் கால்பதித்துள்ளது. இருப்பினும் அந்நிறுவனம் ஏற்றுமதியில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதே வேகத்தில் சென்றால் நடப்பு நிதியாண்டின் முடிவில் ஏற்றுமதி வளர்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று தொழில்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதேபோல் சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் சீனா, வியட்நாம் நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறும் காலம் வெகுதொலைவில் இல்லை என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்  தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com