\
பாஜகவில் இணைந்த பிறகு முலாயம் சிங் யாதவிடம் ஆசிபெற்ற அபர்ணா யாதவ்

பாஜகவில் இணைந்த பிறகு முலாயம் சிங் யாதவிடம் ஆசிபெற்ற அபர்ணா யாதவ்

பாஜகவில் இணைந்த பிறகு முலாயம் சிங் யாதவிடம் ஆசிபெற்ற அபர்ணா யாதவ்
Published on

பாஜகவில் இணைந்த பிறகு முலாயம் சிங் யாதவிடம் அவரது மருமகள் அபர்ணா யாதவ் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் சமாஜ்வாதி கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவில் தன்னை இணைந்துக்கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது சொந்த குடும்பத்தைக்கூட அகிலேஷ் யாதவால் சமாளிக்க முடியவில்லை என பாஜக சீண்டியிருந்தது.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், மாமனாருமான முலாயம் சிங் யாதவை சந்தித்த புகைப்படத்தை அபர்ணா யாதவ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். "பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்த பிறகு லக்னோவில் எனது தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றேன்" என்று அபர்ணா யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ள பாஜக ஆதரவாளர் ஒருவர், "இதன் பொருள் நேதாஜி முலாயம் சிங் யாதவ் கூட பாஜக வெற்றிபெற விரும்புகிறார்'' என பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com