ஜெகன் மோகன் ரெட்டியின் ஜெருசலம் பயணத்துக்கு அரசு நிதி ஒதுக்கியதா? - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஜெகன் மோகன் ரெட்டியின் ஜெருசலம் பயணத்துக்கு அரசு நிதி ஒதுக்கியதா? - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஜெகன் மோகன் ரெட்டியின் ஜெருசலம் பயணத்துக்கு அரசு நிதி ஒதுக்கியதா? - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த பயணங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன

ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி இமலாய வெற்றியை பெற்றது. இதனையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த பயணமாக இஸ்ரேலின் ஜெருசலம் நகருக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 1 முதல் 4ம் தேதி வரை ஜெருசலம் பயணத்தில் இருப்பார் என்றும், 5ம் தேதி டெல்லி திரும்பும் ஜெகன் மோகன், மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 15க்கு மேல் சொந்தகாரணங்களுக்காக ஜெகன் மோகன் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஜெகன் மோகனின் ஜெருசலம் பயணத்துக்கு ரூ.22.52 லட்சத்தை ஆந்திர அரசு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி அவரது குடும்பத்துடன் செல்லும் சொந்த பயணங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த லங்க தினகர், ''அரசு கருவூலத்தின் மீது தேவையற்ற சுமை இது'' என தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஜெருசலம் பயணம் குறித்து தகவல் வெளியிட்ட ஆந்திர அரசு, ''இது முதலமைச்சரின் தனிப்பட்ட பயணம். இதற்கான முழு செலவையும் அவரே ஏற்பார்'' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com