எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
கடந்த 25 ஆம் தேதியன்று காலமான பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
“ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த இந்த மண்ணின் மைந்தராவர் மியூசிக் மேஸ்ட்ரோ எஸ்.பி.பி.
இசை உலகையும், ரசிகர்களையும் மீளமுடியா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்றுள்ளார்.
தனது இசை பயணத்தில் பல்லாயிரம் பாடல்களை பாடிய அவர் பல விருதுகளையும் வென்றுள்ளார். அவரது பணியை பாராட்டி இந்திய அரசாங்கம் அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளையும் கொடுத்து கவுரவித்துள்ளது.
அதே நேரத்தில் இதற்கு முன்னதாக இசை உலக சக்கரவர்த்திகளாக இருந்த லதா மங்கேஸ்வர், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மாதிரியான கலைஞர்களுக்கு பாராத ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது.
அது போல எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.