“பெரும்பான்மை இருந்தால் ஆட்சியமைக்க ஆளுநரை அனுகலாம்” - அமித் ஷா 

“பெரும்பான்மை இருந்தால் ஆட்சியமைக்க ஆளுநரை அனுகலாம்” - அமித் ஷா 
“பெரும்பான்மை இருந்தால் ஆட்சியமைக்க ஆளுநரை அனுகலாம்” - அமித் ஷா 

ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கை இருந்தால் ஆளுநரை அணுகலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவு வந்து 19 நாட்கள் ஆகியும் யாரும் ஆட்சி அமைக்காததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதற்கு முன்பு வேறு எந்த மாநிலத்திலும் மகாராஷ்டிராவிற்கு கொடுத்தது போல ஆட்சி அமைக்க 18 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதில்லை. முந்தைய சட்டப்பேரவையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு தான் கட்சிகளை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எனினும் சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியுமே ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. தற்போதும் எந்தக் கட்சியிடம் ஆட்சியமைக்க தேவையான போதிய பெரும்பான்மை உள்ளதோ அந்தக் கட்சி ஆளுநரை அனுகலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com