\
அனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

அனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

அனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கானுக்கும் சரிகா கட்சேவுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தில் அனுஷ்காவுடன் கோலி பங்கேற்ற புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாகிர்கானுக்கும் சகரிகா கட்சேவுக்கும் முறைப்படி நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சகரிகா ஷாருக் கானின் சக்தே இந்தியா படத்தில் நடித்தவர். அந்தப்படத்தில் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனை காதலிக்கும் பாத்திரத்தில் நடித்திருந்தார். நிஜத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டனாக இருந்த ஜாகீர்கானை அவர் கரம்பிடிக்க இருக்கிறார். மும்பையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், நடிகை மந்திரா பேடி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றாலும் நிகழ்ச்சியின் அட்ராக்சன் விராட் கோலியுடன் அவரது காதலி அனுஷ்கா சர்மா பங்கேற்றதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com