\
குழந்தையை எப்படி வளர்ப்பேன் தெரியுமா? அனுஷ்கா ஷர்மா பகிரும் எதிர்பார்ப்புகள்!

குழந்தையை எப்படி வளர்ப்பேன் தெரியுமா? அனுஷ்கா ஷர்மா பகிரும் எதிர்பார்ப்புகள்!

குழந்தையை எப்படி வளர்ப்பேன் தெரியுமா? அனுஷ்கா ஷர்மா பகிரும் எதிர்பார்ப்புகள்!
Published on

‘எல்லோரிடமும் மரியாதை செலுத்த தனது குழந்தைக்கு கற்பிப்பேன்’ என்று கூறுகிறார் அனுஷ்கா சர்மா.

நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அதையடுத்து பிரசவ காலத்தில் அவருடன் கூட இருப்பதற்காக கோலி ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் கூட கலந்து கொள்ளாமல் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா பிரபல நாளிதழான வோக் நாளிதழின் அட்டைப் படத்துக்கு நிறைமாத கர்ப்பிணி வயிற்றோடு போஸ் கொடுத்துள்ளார். இந்த இதழ் ஜனவரி 2021 இதழாக வெளிவர உள்ளது.

அந்த நேர்காணலில் அனுஷ்கா கூறும்போது, ‘’ஒரு குழந்தையை பொது பார்வையில் வளர்க்க நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை எங்கள் குழந்தையை சமூக ஊடகங்களில் ஈடுபடுத்த நாங்கள் திட்டமிடவில்லை. இது உங்கள் பிள்ளை எடுக்கக்கூடிய ஒரு முடிவு என்று நான் நினைக்கிறேன். எந்தக் குழந்தையும் மற்றவர்களை விட சிறப்புடையவர்களாக இருக்கக்கூடாது. பெரியவர்கள் இதைச் சமாளிப்பது கடினம். இது கடினமாக இருக்கும், ஆனால் நாங்கள் அதைப் பின்பற்ற விரும்புகிறோம்.

நான் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் செய்வதே பெரிய விஷயமாக இருக்கும். கோலியின் விஷயத்தில், அவர் ஆண்டு முழுவதும் விளையாடுகிறார். இப்போது நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக செலவழித்துக் கொண்டிருக்கிறோம். இதுவொரு மகிழ்ச்சியான தருணம்’’ என்கிறார் அவர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com