கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் Favipiravir

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் Favipiravir

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் Favipiravir
Published on

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்தைத் தாண்டியது. இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் உயிரிழப்பு அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு இன்றிரவு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்நிலையில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com