'பசுக்களைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம்!' - கர்நாடகாவில் மசோதா நிறைவேற்றம்

'பசுக்களைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம்!' - கர்நாடகாவில் மசோதா நிறைவேற்றம்
'பசுக்களைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம்!' - கர்நாடகாவில் மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா, கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் பசுவதையைத் தடுக்க சட்டம் இயற்றும் முயற்சியில் அம்மாநில அரசு கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.  

இதன்படி கர்நாடகாவில் இனி பசுக்களை சட்ட விரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொல்லப்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவேளை ஒரு பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு, அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்தக் கட்டத்தில் மட்டுமே அது வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது.

பசுவதை அல்லது பசு கொல்லப்படுவதாக தெரிய வந்தால், உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரி எந்தவொரு இடத்திலும் சோதனை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்யும் நபருக்கு சிறைக்காவலுடன் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இப்புதிய சட்டத்தில் கால்நடை இறைச்சி என்பது மாட்டிறைச்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எருமை மாட்டை வெட்டி இறைச்சித் தேவைக்கு பயன்படுத்த தடையில்லை என்று அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு செளஹான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com