ஆந்திராவில் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு ரூ. 20 கோடிக்கு மேல் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருப்பவர் ஏ. சிவபிரசாத். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைப்பதாக ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குர்னூலில் உள்ள சிவபிரசாத் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஹைதராபாத், பெங்களூர், தடிபட்ரி, ஆகிய பகுதிகளிலும் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன. ஐந்து இடங்களில் மொத்தம் ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சிவபிரசாத்திற்கு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
குர்னூலில் உள்ள வீட்டில், ரூ. 1.45 லட்சமும் ஒரு கிலோ தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் சிவபிரசாத்திற்கு பெங்களூரில் ரூ. 3 கோடி மதிப்பிலான அபார்ட்மெண்ட்டும், ரூ. 2 கோடி மதிப்பில் நிலமும் இருப்பது தெரியவந்தது. ஹைதராபாத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட்டும் ரூ. 1 கோடி மதிப்பில் வீட்டுமனையும் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
ஹைதராபாத், பெங்களூர், தடிபட்ரி, உகாண்டா ஆகிய இடங்களில் வைத்திருந்த லார்க்கர்களையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.