ஒருவழியாக முடிந்தது தொகுதி வரையறைகள்.. விரைவில் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அறிவிப்பு?

ஒருவழியாக முடிந்தது தொகுதி வரையறைகள்.. விரைவில் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அறிவிப்பு?
ஒருவழியாக முடிந்தது தொகுதி வரையறைகள்.. விரைவில் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் அறிவிப்பு?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 90 சட்டமன்ற தொகுதிகளும், 5 நாடாளுமன்ற இடங்களும் முறையாக பிரிக்கப்பட்டு இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்ட பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 3 பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டு எல்லை வரையறை பணிகள் நடைபெற்று வந்தது. சிறப்பு சட்டம் ரத்து செய்த பிறகு (2019ம் ஆண்டு) 2020ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும்.



ஆனால் எல்லை வரையறு பணிகள் முழுமையடையாத காரணத்தினால் தேர்தலை இப்போது நடத்த சாத்தியமில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் 370 சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி சென்று பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த நிலையில் விரைவில் தேர்தல் அறிவிக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 3 பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் பணிகளை இறுதி செய்து கையெழுதிட்டது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுஷில் சந்திரா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எல்லை வரையறை பணிகளின் படி 90 சட்டமன்ற தொகுதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. அதில் 43 தொகுதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், 47 தொகுதிகள் ஜம்மு பள்ளத்தாக்கு பகுதியிலும் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் முறையாக வரையறுக்கப்பட்டு இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து இருப்பதாக தெரிவித்தார்.



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு நாடாளுமன்ற இடங்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகள் இருப்பதை எல்லை நிர்ணய ஆணையம் உறுதி செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு நாடாளுமன்ற இடங்களுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகள் பிரிக்கப்பட்டு இருப்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்து உள்ளதாக தெரிவித்தார்.

எல்லை வரையறை பணிகள் முழுமையடைந்து, நாடாளுமன்ற இடங்கள் மற்றும் சட்டமன்ற இடங்கள் முறையாக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நிரஞ்சன் குமார் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com