“மஸ்கட்டிலிருந்து அழைத்து வந்ததற்கு நன்றி” - 8 மாத கர்ப்பிணிப் பெண்

“மஸ்கட்டிலிருந்து அழைத்து வந்ததற்கு நன்றி” - 8 மாத கர்ப்பிணிப் பெண்

“மஸ்கட்டிலிருந்து அழைத்து வந்ததற்கு நன்றி” - 8 மாத கர்ப்பிணிப் பெண்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொது ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றன.இதனால் பெரும்பான்மையான நாடுகளில் விமானப் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஆகவே வேலை நிமித்தமாக வெளிநாடு சென்ற இந்தியர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கடுமையாக அவதிப்பட்டனர்.

இதில் சிலர் வெளிநாடுகளில் தாங்கள் படும் இன்னல்களை வீடியோ வழியாக வெளிப்படுத்தி, மத்திய அரசு தங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மத்திய அரசு அவர்களை மீட்கச் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது. அதன் படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியா வந்தனர். சில நாட்கள் முன்பு கூட ஜார்ஜியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 243 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.

அந்த வகையில் இன்று 8 மாத கர்ப்பிணியான அஞ்சலி என்பவர் மஸ்கட்டிலிருந்து இந்தியாவிற்குச் சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது “ இந்த நேரத்தில் என்னை மீட்க நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு நன்றி”எனத் தெரிவித்தார்.

இதுகுறித்த புகைப்படத்தை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ட்விட்டிற்கு பதிலளித்த நெட்டிசன்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஏன் நடைப்பயணமாகப் பல கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் வெளிமாநிலத்தவர்களுக்கு உதவ மறுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com