ஊழல் புகார் எதிரொலி: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

ஊழல் புகார் எதிரொலி: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா
ஊழல் புகார் எதிரொலி: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீதான மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் தெரிவித்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரத்தில், மும்பை குற்றவியல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் பரம் வீர் சிங், உள்துறை அமைச்சராக இருக்கும் அனில் தேஷ்முக், ஹோட்டல்கள், பார்களில் இருந்து மாதந்தோறும் 100 கோடி வசூலித்து தருமாறு சச்சின் வாஸி உள்ளிட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பரம் வீர் சிங் வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் இருக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு குறித்து, 15 நாட்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரைவே சந்தித்த உள்துறை அமைச்சரான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், ராஜினாமா கடிதத்தை அளித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com