உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!

உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!

உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
Published on

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் அரசியல், தொழில்துறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளிலுள்ள உலகின் தலைசிறந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்ச்சியாக 9ஆவது ஆண்டாக ஜெர்மனியின் சான்சிலர், ஆஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். 

இந்தாண்டு சிரிய அகதிகளை ஜெர்மனி நாட்டிற்குள் அனுமதித்ததற்காக இந்த ஆண்டின் தலை சிறந்த பெண்ணாக முதலிடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டினா லெக்ராண்ட் பிடித்துள்ளார். 

இந்தப் பட்டியலில் 34ஆவது இடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரெம்ப் ஆகியோரை முந்தியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 இடத்தில் உள்ளார். அதேபோல அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரெம்ப் 42ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் பட்டியலில் 16 வயதில் இடம்பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கிரேட்டா தன்பெர்க் பெற்றுள்ளார். இவர் இந்தப் பட்டியலில் 100ஆவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com