
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாராசந்த் நாயக், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தைச் சேர்ந்த புஷ்பாவதி என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப சண்டை ஏற்பட்டு வந்ததுள்ளது.
இந்நிலையில், இன்று காலை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புஷ்பாவதியை சமாதனம் செய்வதற்காக தாராசந்த் நாயக் முத்தம் (லிப் டூ லிப் கிஸ்) கொடுக்க முயன்றுள்ளார். இதனை புஷ்பாவதி தடுக்க முயன்ற நிலையில், வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதால் தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக் சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜொன்னகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தன் விருப்பத்திற்கு மாறாக முத்தமிட முயன்றதால் இவ்வாறு செய்ததாக மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கணவரிடம் போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.