காரில் உலா வந்து பட்டுப்புடவை திருடிய கும்பல்

காரில் உலா வந்து பட்டுப்புடவை திருடிய கும்பல்

காரில் உலா வந்து பட்டுப்புடவை திருடிய கும்பல்
Published on

காரில் உலா வந்து தமிழகத்தின் பல இடங்களில் பட்டுப்புடவை திருடிய ஆந்திராவைச் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை திருமங்கலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியே வந்த கார் ஒன்றை ஆய்வு செய்தனர். அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் இருந்தனர். அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த பட்டுப்புடவை திருடும் கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காரிலிருந்த கனகதுர்கா, நாகமணி‌, மேனா மற்றும் பாலு மகேந்திரா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்‌‌. 

இந்தக் கும்பல் பிப்ரவரி 11ஆம் தேதி அசோக்நகரிலுள்ள கடை ஒன்றில் கைவரிசை காட்டியிருந்தது. சிசிடிவி காட்சியை பயன்படுத்தியும், கார் எண்ணை வைத்தும் திருடர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்கள் வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டனர். இந்தக் கும்பல் சென்னை, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டுப்புடவைகளை திருடியது விசாரணையில் வெளிவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com