கழிப்பறை கட்டவில்லை என்றால் வீட்டிற்கு வரமாட்டோம்: செல்லமாக மிரட்டிய பள்ளி சிறுமிகள்

கழிப்பறை கட்டவில்லை என்றால் வீட்டிற்கு வரமாட்டோம்: செல்லமாக மிரட்டிய பள்ளி சிறுமிகள்

கழிப்பறை கட்டவில்லை என்றால் வீட்டிற்கு வரமாட்டோம்: செல்லமாக மிரட்டிய பள்ளி சிறுமிகள்
Published on

ஆந்திராவில், தனியாக கழிப்பறை கட்டவில்லை என்றால் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வர மாட்டோம் என்று பள்ளி சிறுமிகள் தங்களின்
பெற்றோர்களை செல்லமாக மிரட்டி கடிதம் எழுதியுள்ளனர். 

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பொங்கலைப் போன்று, ஆந்திராவில் மகர சங்கராந்தி என்ற பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தப்
பண்டிகையை கொண்டாடும் விதமாக அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், ஆந்திராவின் பமுறு
கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெளியூர்களில் இருக்கும் தங்களின் பெற்றோர்களுக்கு
ஒட்டுமொத்தமாக ஒரே தகவலை கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

அதில், ”வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையின் விடுமுறைக்கு நாங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றால், நீங்கள் நம் வீடுகளில்
தனியாக கழிப்பறையை கட்டாயமாக கட்டி இருக்க வேண்டும். எங்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், திறந்த வெளி பகுதிகளை கழிப்பறையாகப்
பயன்படுத்துவது ஆரோக்கியமற்ற வழிமுறை என்று கூறியுள்ளனர். அதே போல் அரசாங்கமும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டிருக்க
வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளது. எனவே, நீங்கள் பண்டிகைக்கு முன், கட்டாயமாக கழிப்பறையை நமது வீடுகளில் கட்டிருக்க வேண்டும்.
இல்லையென்றால் நாங்கள் விடுமுறைக்கு வீட்டிற்கு வரமாட்டோம்” என்று எழுதியுள்ளனர். 

தங்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், பள்ளி மாணவிகளின் இத்தகைய செயலிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள்
குவிந்து வருகிறது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com