ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு !

ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு !
ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு !

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் ஒரே நாளில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,30,557 ஆக அதிகரித்துள்ளது. அந்திராவில் இப்போது 69,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை கொரோனா பாதிப்பின் காரணமாக அம்மாநிலத்தில் 1,281 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 60,024 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் இதுவரை 18,90,077 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவோரின் விகிதம் 6.91 சதவீதமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com