\
ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: ஆந்திர அரசு சாதனை

ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: ஆந்திர அரசு சாதனை

ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: ஆந்திர அரசு சாதனை
Published on

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்ப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று ஞாயிற்றுக்கிழமை 13.72 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலமாக ஒரு இந்திய மாநிலத்தில் ஒரே நாளில் மிக அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட மாநிலமாக சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை 1.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com