மற்ற மதுபானங்களை விட பீர் நல்லது: ஆந்திர அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் மற்ற மதுபானங்களை விட உடலுக்கு நல்லது என ஆந்திர மாநில அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில அரசு பீர் விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது என்றும், மற்ற மதுபானங்களை விட குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் உடலுக்கு நல்லது என ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவல் ஜவஹர் தெரிவித்துள்ளார். அதாவது, பீர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என தான் சொல்லவில்லை என்றும், மற்ற மதுபானங்களைவிட ஆல்கஹால் குறைந்த பீர் ஆரோக்கியமானது என்று தெரிவித்த ஜவஹர், குறைந்த ஆல்கஹாலை கொண்ட பீர் உள்ளுரில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மதுகுடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது, குறைந்தபட்சம் ஆல்கஹால் குறைந்த மதுபானத்தை குடிக்க வைக்கவே இந்த உற்பத்தியை ஊக்குவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.