ஆந்திரா: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

விஜயவாடாவில் முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற கார் லாரி மீது மோதிய விபத்தல் 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
road accident
road accidentpt desk

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரிக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற கார் நல்லஜர்லா மண்டலம் அனந்தப்பள்ளி அருகே இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டுருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

accident
accidentpt desk

அப்போது லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது. இதில், 2 வயது குழந்தை, இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், அவர்களை நல்லஜர்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com