இந்தியா
ஆந்திரா: அனாதரவாக விடப்பட்ட 21 சடலங்களுக்கு இறுதி சடங்கை செய்த ஆந்திர எம்எல்ஏ
ஆந்திரா: அனாதரவாக விடப்பட்ட 21 சடலங்களுக்கு இறுதி சடங்கை செய்த ஆந்திர எம்எல்ஏ
ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் அனாதரவாக விடப்பட்ட 21 கொரோனா நோயாளிகளின் சடலங்களுக்கு, திருப்பதி எம்எல்ஏ. கருணாகரரெட்டி தலைமையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
திருப்பதியில் கொரோனா பெருந்தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை மருத்துவமனையிலேயே பலர் விட்டுச் செல்வது கவலையளிக்கிறது. இந்நிலையில், திருப்பதி லுயா அரசு மருத்துவமனையில் அனாதரவாக விடப்பட்ட 21 உடல்களை மகாபிரஸ்தானம் மற்றும் முஸ்லீம் கூட்டு நடவடிக்கை குழுவுடன் இணைந்து வாகனங்களில் கொண்டு சென்று அவரவர் மதப்படி அடக்கம் செய்தனர்.