இந்தியா
ஆந்திரா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - தப்பாட்டம் ஆடிய எம்எல்ஏ ரோஜா
ஆந்திரா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - தப்பாட்டம் ஆடிய எம்எல்ஏ ரோஜா
நகரி தொகுதி தப்பாட்ட கலைஞர்களுக்கு தப்பு வழங்கிய எம்எல்ஏ ரோஜா அவர்களுடன் தப்பாட்டம் ஆடி மகிழ்ந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா, தமது தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக புத்தூரில் உள்ள 72 தப்பாட்ட கலைஞர்களுக்கு தப்பு, கொலுசு, உடைகள் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் அவர்களுடன் தப்பாட்டம் ஆடி பேசிய நடிகை ரோஜா, தனது பகுதியில் உள்ள தப்பாட்டக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு இந்த பொருட்களை அரசு மூலம் பெற்று வழங்கியதாக தெரிவித்தார்.