13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - 74 பேர் கைது

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - 74 பேர் கைது

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் - 74 பேர் கைது
Published on

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 74 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினரின் 13 வயது மகள் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்தச் சிறுமியின் தாயார் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். தாயாருடன் மருத்துவமனையில் இருந்த நாட்களில் சிறுமியின் நட்பாக இருந்த சொர்ணகுமாரி என்ற பெண் பணியாளர், அந்த சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியின் தந்தை, தனது மகளை சொர்ணகுமாரியிடம் ஓப்படைத்திருக்கிறார். இதனையடுத்து, அந்த சிறுமியை அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர் சொர்ணகுமாரி, அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

இந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, குண்டூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சொர்ணகுமாரியை அதிரடியாக கைது செய்தனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதுவரை 74 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 6 பேரை காணவில்லை என போலீசார் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: ஆந்திரா: மணமகனின் கண்களை துணியால் கட்டி மணமகள் நடத்திய கொடூரம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com