இந்தியா
ஆந்திரா மகாராஜா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 5 பேர் உயிரிழப்பு
ஆந்திரா மகாராஜா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 5 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் மகாராஜா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விஜயநகரம் மாவட்டம் மகாராஜா அரசு மருத்துவமனையில் 290 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 25 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் விசாகபட்டினத்தில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.