இந்தியா
ஆந்திரா: கொரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய அவலம்
ஆந்திரா: கொரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிய அவலம்
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றால் பாதித்தவரின் வீட்டை அக்கம்பக்கத்தினர் இரவு நேரத்தில் பூட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
நெல்லூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில், தாய், தந்தை, மகன் கொண்ட குடும்பம் வசித்து வருகிறது. இவர்களின் பெற்றோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது மகன் அருகில் உள்ள மருந்தகத்திற்குச் சென்று தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இரவு நேரத்தில் இவர்களின் வீட்டை வெளியே பூட்டிவிட்டனர்.