ஆந்திரா: ஏர் இந்தியா விமான விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய 64 பயணிகள்

ஆந்திரா: ஏர் இந்தியா விமான விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய 64 பயணிகள்

ஆந்திரா: ஏர் இந்தியா விமான விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய 64 பயணிகள்

கிருஷ்ணா மாவட்டம் கண்ணவரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பியது. 64 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு இன்று காலை ஐக்கிய அரபு நாட்டில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்தது. அப்போது தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமானநிலைய ரன்வேயை விட்டு விலகிச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் விமானத்தின் இறக்கை சேதமடைந்த நிலையில் பைலட்டின் சாமர்த்தியத்தால் 64 பயணிகளும் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பயணிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடையே பரபரப்பு காணப்பட்டது. விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com