"பாலியல்வன்கொடுமை செய்ததாக கூறுவேன்"லிப்ட் கேட்பது போல் நடித்துப் பல ஆண்களிடம் பணம் பறித்த இளம்பெண்!
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சாஸ்த்திரிபுரத்தை சேர்ந்தவர் சுமைய சுல்தானா [30]. இவர் தனியாக காரில் செல்லும் ஆண்களை மட்டும் குறி வைத்து லிப்ட் கேட்பாராம். பின்னர் அவர்களிடம் தன்னுடைய பாணியில் அவர்களை மயக்குவது போலப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இவருடைய பேச்சுக்கு மயங்கிய சில நபர்கள் லிப்ட் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களுடன் சிறிது தூரம் பயணம் செய்துவிட்டு, தனது ஆடைகளைத் தானே கிழித்துக்கொண்டு "பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிப்பேன்" என கார் ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவருடைய மிரட்டலுக்குப் பயந்து போன பல ஓட்டுநர்கள் அவருக்குப் பயந்து அந்த பெண் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள் எனத் தெரிகிறது. மேலும், பணம் தர மறுக்கும் நபர்களிடம் பாலியல் வழக்கில் உள்ளே சென்றால் என ஆகும் தெரியுமா? என தன்னுடைய பாணியில் மிரட்டியுள்ளார். இது போல மிரட்டிப் பல அப்பாவி ஓட்டுநர்களை வழக்கில் மாட்ட வைத்து விட்டுத் தப்பி வந்துள்ளார்.
இந்தநிலையில், வழக்கம் போல ஒரு கார் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் தன்னுடைய பாணியில் சேலையைக் கிழித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஓட்டுநர் பணம் தர மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண் மற்றும் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பெண் இது போல் பல ஓட்டுநர்களை பாலியல் செய்ததாகக் கூறி போலீசாரிடம் சிக்க வைத்தது, மற்றும் அவர்களிடம் பணம் பறித்தது ஆகியவை தெரிய வந்துள்ளது.
பின்னர் சுமையா சுல்தானை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.