ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: நீரில் மூழ்கி 14 பேர் பலி
ஆந்திர மாநிலம் இப்ராஹிம்பட்டணம் பகுதி கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர அரசுக்கு சொந்தமான படகு கிருஷ்ணா மாவட்டம் பவானி தீவில் இருந்து 38 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இப்ராகிம் பட்டணம் பகுதியை நோக்கி சென்று கொண்டிந்தது. படகில் இருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் சென்ற அனைவரும் நதியில் மூழ்கினர்.
நதியில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் வாசிகளும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். மூழ்கியவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஆந்திர டிஜிபி சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.