\
ஆண் போல் நடித்து 3 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்..!

ஆண் போல் நடித்து 3 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்..!

ஆண் போல் நடித்து 3 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்..!
Published on: 

ஆந்திராவில் ஆண் போல் நடித்து பெண் ஒருவர், மூன்று இளம்பெண்களை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஈடுகலபாடு கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண் ரமாதேவி. ஆண்களை போல் கிராப் வெட்டி, உடையணிந்து கிட்டத்தட்ட ஆண் போல வெளி உலகிற்கு நடித்து வந்தார். ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்த அவர் தற்போது மூன்றாவதாக மோனிகா என்ற பெண்ணையும் திருமணம் செய்திருக்கிறார். ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்துவிட்டு ஒருவாரம் மட்டுமே வாழ்வாராம். பின்னர், வெளிஊரில் வேலை இருக்கிறது என கூறிவிட்டு சென்றுவிடுவாராம்.

மோனிகாவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போதுதான் ரமாதேவி ஆண் அல்ல பெண் என்பது தெரியவந்துள்ளது. ரமாதேவியின் வேஷம் மோனிகா மூலம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோனிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரமாதேவியை போலீசார் கைது செய்தனர். பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது பணத்திற்காகவா? அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவா? என்கிற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com