எம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

எம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

எம்.பி., எம்.எல்.ஏக்களின் நாக்கு துண்டிக்கப்படும்: போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை
Published on

போலீசாரை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசினால் உங்களின் நாக்கு துண்டாக்கப்படும் என எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஆந்திரா இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.யான திவாகர் ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன் போலீசாரை சரமாரியாக விமர்சித்து பேசியிருந்தார். அதாவது தாதிபத்ரி கிராமம் அருகே இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருநங்கைகள் போல ஓடி ஒளிந்துவிட்டதாக திவாகர் ரெட்டி போலீசாரை கடுமையாக சாடியிருந்தார். எம்.பி திவாகர் ரெட்டியின் பேச்சு போலீசார் மத்தியில் சிறிது சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் போலீசாரை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசினால் உங்களின் நாக்கு துண்டாக்கப்படும் என எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஆந்திரா இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “இதுவரை நாங்கள் பொறுமை காத்து வந்தோம். இனி யாரேனும் போலீசாரை வரம்பு கடந்து பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் நாக்கை துண்டிக்காகி விடுவோம். கவனத்துடன் இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள எம்.பி திவாகர் ரெட்டி, “என் நாக்கை அறுங்கள் பார்ப்போம். நான் எங்கு வர வேண்டும் என சொல்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மீது திவாகர் ரெட்டி புகாரும் அளித்துள்ளார். இருப்பினும் இதுவரை இன்ஸ்பெக்டர் மாதவ் மீது எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தாதிபத்ரி போலீஸ் அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com