பாலியல் ஆற்றலுக்காக கழுதை இறைச்சி பதுக்கலா? - கூண்டோடு கைப்பற்றிய ஆந்திர போலீஸ்!

பாலியல் ஆற்றலுக்காக கழுதை இறைச்சி பதுக்கலா? - கூண்டோடு கைப்பற்றிய ஆந்திர போலீஸ்!
பாலியல் ஆற்றலுக்காக கழுதை இறைச்சி பதுக்கலா? - கூண்டோடு கைப்பற்றிய ஆந்திர போலீஸ்!

ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சியை சாப்பிடுவதை போல கழுதையின் இறைச்சியை சாப்பிடுவது சமீப காலமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன.

எருமைப்பால், ஆட்டுப்பால், பசும் பாலுக்கு நிகராக கழுதைப் பாலுக்கு கிராக்கி அதிகரித்திருக்கிறது. இதனால் கழுதைப் பண்ணைத் தொழில் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

ஏனெனில் கழுதைப் பால் குடிப்பதனால் சில உடல்நல நன்மைகளும், கழுதையின் இறைச்சியை சாப்பிடுவதால் பாலியல் ரீதியான ஆற்றல் பெருகுவதாகவும் நம்பப்படுவதால் கழுதையை பதுக்குவதாகவும் சட்டவிரோதமாக அதன் இறைச்சி விற்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஆந்திராவின் பாபட்லா காவல்நிலையத்தில் கழுதை இறைச்சி குறித்து புகார் ஒன்றை அளித்திருக்கிறது. அதன்படி ஆந்திராவின் பாபட்லா முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் 400 கிலோ கழுதை இறைச்சி கைப்பற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல, உசிலிப்பேட்டையில் 2 இடங்களிலும், வேடபாலத்தில் ஒரு இடத்திலும், டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு இடத்திலும் நடத்தப்பட்ட சோதனையில், கழுதை இறைச்சி மற்றும் தூக்கி எறியப்பட்ட உடல் பாகங்கள், தலை, கால்கள், வால்களில் இணைக்கப்பட்ட சதைகள் ஆகியவையும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன்.

இதனையடுத்து விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (PCA) சட்டம் 1960 மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிந்து, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் பாபட்லா போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல் எனக் கூறிய போலீஸ் அதிகாரிகள், சட்டத்தை மீறி கழுதை இறைச்சியை விற்றாலோ பதுக்கினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com