Municipal councilor
Municipal councilorpt desk

ஆந்திரா: தன்னைத் தானே காலணியால் அடித்துக் கொண்ட நகராட்சி கவுன்சிலர் - காரணம் இதுதான்!

ஆந்திராவில் நகராட்சி கவுன்சிலர் ஒருவர் தேர்தலின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்ற வேதனையில் தன்னைத்தானே காலணியால் அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Published on

அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நரசிபட்டணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராமராஜு, நகராட்சியின் 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.

இந்நிலையில், நகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராமராஜு, தனது வார்டில் அடிப்படைவசதிகளை நிறைவேற்றப்படவில்லை என்று முறையிட்டார்.

Municipal councilor
Municipal councilorpt desk

கவுன்சிலராகி 31 மாதங்கள் ஆகியும், தனது வார்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்தார். ஒருகட்டத்தில், தனது காலணியால் தன்னைத் தானே முகத்தில் அடித்துக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஒரு கவுன்சிலர் தன்னைத் தானே காலணியால் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com