மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு!

மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு!

மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு!
Published on

மாவோயிஸ்ட்டுகளின் நடத்திய தாக்குதலில் ஆந்திர மாநில எம்.எல்.ஏ சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். இவரும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமாவும் இன்று காலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பெண் மாவோயிஸ்ட் தலைமையிலாக குழுவினர் தர்மிகுண்டா பகுதியில் நடத்திய இந்த தாக்குதலில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்த சர்வேஸ்வர ராவ், பின்னர் தெலுங்கு கட்சியில் சேர்ந்தார்.  அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com